நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசியல் சாசனத்துக்கு எதிரானது பொது சிவில் சட்டம்: இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

புது டெல்லி:

அரசியல் சாசனத்துக்கு எதிரானது பொது சிவில் சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்தது.

இந்தியாவில் அனைத்து சமூகங்களுக்குமான பொது சிவில் சட்டம் அமலாக்கப்படுவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இக் கருத்தை தெரிவித்துள்ளது.

பிரதமர் பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. இதில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சட்ட ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய வரைவு ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் காலித் ரஷீத் ஃபாரங்கி மாலி,  கூறுகையில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

இச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். இந்த விவகாரம் குறித்து சட்ட ஆணையத்தில் எதிர்ப்பை பதிவு செய்ய ஜூலை 14ஆம் தேதி கடைசி நாளாகும். சட்ட ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய வரைவு ஆவணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல மதங்களும் கலாசாரங்களும் பின்பற்றப்படும் நாடு இந்தியா. பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின், பார்சி சமூகத்தினர் உள்ளிட்டோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

இந்திய முஸ்லிம்களிடையே இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் பயன்பாட்டை பாதுகாத்து, ஊக்குவிக்கும் நோக்கத்துக்காக 1973இல் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது.

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்து கேட்கும் நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

இதனிடையே, பொது சிவில் சட்டத்தை பொது மக்கள் மீது திணிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியது, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்றும் ப.சிதம்பரம் விமர்சித்தார்.

இந்தச் சட்டம் குறித்து இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதுவரையில் 8.5 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் https://legalaffairs.gov.in/law_commission/ucc  என்ற லிங்கில் சென்று பொது சிவில் சட்டத்தின் மீதான கருத்தை பதிவு செய்யலாம்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset