நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி

புது டெல்லி:

அமெரிக்க, எகிப்து பயணங்களை முடித்து கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் அவசியம் தேவை என பேசினார்.

பாஜக ஆளும் கோவா, குஜராத் நிலங்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார். இது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளதை காட்டுகிறது.

மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு பாஜக வினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி:

நாட்டில் சிலர் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அது பேராபத்தை விளைவிக்கும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டும் என அரசமைப்புச் சட்டமே தெரிவித்துள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக சிலர் பொது சிவில் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

நாட்டில் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எந்தக் கட்சிகள் ஆதாயம் தேடிக் கொள்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றோர் உறுப்பினருக்கு வேறு சட்டமும் இருந்தால், அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா? அதேபோல், வெவ்வேறு விதமான சட்டங்களுடன் நாடும் எவ்வாறு வளர்ச்சி காண முடியும்? அதற்கு பொது சிவில் சட்டம் அவசியம்.

முத்தலாக் நடைமுறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் தாய்மார்களுக்கு அநீதியை ஏற்படுத்துகின்றனர். எகிப்தில் முத்தலாக் நடைமுறை முன்பே நீக்கப்பட்டது. பாகிஸ்தான், கத்தார், இந்தோனேசியா உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் கூட அந்நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset