நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணீப்பூரில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புது டெல்லி:

வன்முறை நீடித்து வரும் மணிப்பூரின் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே வன்முறை நீடித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தில்லியில் சனிக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக, , திரிணமூல் காங்கிரஸ்,  திமுக,அதிமுக,  பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Dozens killed in ethnic violence in India's Manipur state - Sinar Daily

கூட்டத்தில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய  வேண்டும்; கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் முன்வைத்தன.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென சமாஜவாதி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.

மணிப்பூர் நிலைமையை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset