நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பைடன் மனைவிக்கு வைரம் - பதிலுக்கு பிரதமர் மோடிக்கு கேமிரா பரிசளிப்பு

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர்  ஜோ பைடனுக்கு வெள்ளி விநாயகர் சிலை, விளக்கையும், அவரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தையும் நினைவுப் பரிசாக வழங்கினார்.

பதிலுக்கு ஜோ பைடன் தம்பதியினர் பிரதமர் மோடிக்கு பழம்பெரும் கேமிராவை பரிசாக அளித்தனர்.

அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்தனர்.

அப்போது, இருவருக்கும் பிரதமர் மோடி நினைவுப் பரிசுகளை வழங்கினார். சந்தனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட வெள்ளி விநாயகர் சிலை, விளக்கு ஆகியவற்றை அதிபர் பைடனுக்கு அவர் பரிசளித்தார்.  

அயர்லாந்து கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் மீது ஆர்வம் கொண்டவர் அதிபர் பைடன். யேட்ஸ் 1937ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட "10 முக்கிய உபநிஷத்துகள்' புத்தகத்தின் முதல் பதிப்பையும் அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் மதிப்புகொண்ட வைரத்தை பிரதமர் மோடி பரிசளித்தார்.

அதிபர் பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் சார்பில் பிரதமர் மோடிக்கு பழங்கால அமெரிக்கன் கேமரா, அமெரிக்க வன உயிரினங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்டின் கவிதைகள் அடங்கிய புத்தகத்தின் முதல் பதிப்பு உள்ளிட்டவை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset