நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் நிதி குறைந்தது

புது டெல்லி:

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் நிதி வைப்பு 2022இல் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்திருப்பதாக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. இதனால் சர்வதேச பணக்காரர்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்தப் பணத்தை மீட்டு  அனைவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், சுவிஸ் வங்கி இந்திய அரசிடம் அளித்துள்ள டெபாசிட் செய்துள்ள விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது.

2021 இல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்பு, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ரூ.30,500 கோடிக்கு மேல் சென்றதாக சுவிஸ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 2022 இறுதியில் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்துள்ளது.

2011, 2013, 2017, 2020, 2021ஆம் ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்தியர்களின் பணம் குறைந்து வந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் அதிக முதலீடு செய்துள்ள வெளிநாட்டினரின் பட்டியலில் ரூ.28,26,423 கோடி முதலீடுகளுடன் பிரிட்டன் முதலிடம் வகிக்கிறது. ரூ.12,16,551 கோடி முதலீட்டுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

மேற்கு இந்திய தீவுகள், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், சிங்கப்பூர், லக்ஸம்பெர்க், பஹாமாஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset