நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நான் குற்றமற்றவன்: நீதிமன்றத்தில் டிரம்ப் வாக்குமூலம்

மியாமி:

ஃபுளோரிடா மாகாண இல்லத்தில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வைத்திருந்த தேச விரோத குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் குற்றமற்றவன் என்று கூறினார்.

அமெரிக்க அதிபராக 2017 ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

வெள்ளை மாளிகையை விட்டு 2021ஆம் ஆண்டு அவர் வெளியேறியபோது, அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை அவர் எடுத்துச் சென்றதாகவும், அதில் சில ஆவணங்களை விசாரணையில் அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தார்.

எஃப்.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மியாமி நகரிலுள்ள ஃபுளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் அமெரிக்க அணு ஆயுத ரகசியங்கள், ராணுவத் திட்டங்கள் அடங்கிய ஆவணங்கள் டிரம்ப் இல்லத்தில் இருந்ததாக அவர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மியாமி நீதிமன்றத்தில் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆஜராகி சரணடைந்தார். தான் குற்றமற்றவன் என்று நீதிபதி முன்பு கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஊழல்வாதி என்று குற்றம்சாட்டினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset