
செய்திகள் இந்தியா
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
புது டெல்லி:
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒடிஸா ரயில் விபத்து ஏற்பட்ட பிறகு அங்கு செல்வதற்கான விமான கட்டணங்கள் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டன.
மேலும், கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கோஃபர்ஸ்ட் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியதாலும் விமான பயணக் கட்டணம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆலோசனை மேற்கொண்டார்.
பயணக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள வழித்தடங்களில் கட்டணத்தை சுயமாக ஒழுங்குப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழிமுறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிக்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm