நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பத்மஸ்ரீ ஹக்கீம் சையத் கலீஃபத்துல்லா காலமானார் 

சென்னை:

இந்தியாவின் பிரபல யுனானி மருத்துவர் பேராசிரியர் பத்மஸ்ரீ ஹக்கீம் சையத் கலீபத்துல்லா இன்று காலை 10 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.

பல அரிய மருந்துகளை கண்டுபிடித்தததோடு நியாமத் சயின்ஸ் அகாடமியை  நிறுவி யுனானி மருத்துவத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். 

யுனானியின் மாற்று மருத்துவ முறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்த கலீபத்துல்லா மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் 2014 ஆம் ஆண்டில், உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனை அன்றைய இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி அவருக்கு வழங்கினார்.

இந்தியாவின் எட்டாவது அதிபராக இருந்த ஆர். வெங்கடராமன் அவர்களின் தனிப்பட்ட மருத்துவராகவும் பத்மஸ்ரீ ஹக்கீம் சையத் கலீபத்துல்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹக்கீம் கலீபத்துல்லா 1987 முதல் 1991 வரை இந்திய குடியரசுத் தலைவரின் கெளரவ மருத்துவராக இருந்தார்.

அவர் புது தில்லியில் உள்ள யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் ஆளும் குழுவின் உறுப்பினராகவும், அதன் மருத்துவ ஆராய்ச்சி துணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

இந்திய அரசின் ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் மேலும் பல பதவிகளை வகித்தார்.

2009 ஆம் ஆண்டு மலேசியாவில் யுனானி மருத்துவ ஆய்வுக்கழகத் துவக்க விழாவில் அவர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset