நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

வாஷிங்டன் :

உலகின் முன்னணி தொலைப்பேசி, கணிணி உட்பட பல தொழில்நுட்பச் சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடத்தில் இன்று உலகலாவிய டெவலப்பர்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. 

இதில் ஆப்பிள் நிறுவனம் புதியத் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், தங்கள் நிறுவன சாதனங்களில் புதிய அம்சங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 வித்தியாசமான நிறங்களில் வெளியாகியுள்ள மேக்புக் ஏர் மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்2 மேக்ஸ், எம்2 அல்ட்ரா எஸ்ஒசி ஆகிய இரு பெயர்களில் இந்த மாடல் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் புரோ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் சிலிகான் தொழில்நுட்ப வசதியுடன் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளான ஐஒஎஸ் 17-ல் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுளன. இதன் மூலம் இந்த மென்பொருள் மூலம் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஆப்பிள் ஐஒஎஸ் 17 மென்பொருளை கொண்ட ஐபோன் உள்பட சாதனங்களில் 'சிரி' வசதி உள்ளது. இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஐபோன் தேடுபொறி மூலம் உரிய தகவல்களை அளிக்கிறது. இதில், ஹெய் சிரி (Hey Siri) என்பதற்கு பதில் இனி 'சிரி' (Siri) என மட்டும் கேட்டாள் போது என வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

-அஸ்வினி செந்ந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset