
செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டாளர்களுக்கான விருதை ஷர்மேந்திரன் - தீனா வென்றனர்
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டாளர்களுக்கான விருதை ஷர்மேந்திரன், தீனா தட்டிச் சென்றனர்.
2021-2022ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை கராத்தே வீரர் ஆர். ஷர்மேந்திரன் தட்டிச் சென்றார்.
அதே வேளையில் சிறந்த வீராங்கனைக்கான விருதை பூப்பந்து வீராங்கனை எம்.தீனா தட்டிச் சென்றார்.
இருவருக்கும் தலா 10 ஆயிரம் வெள்ளி, வெற்றி கிண்ணம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இவர்களை தவிர்த்து இளம் நீச்சல் வீரர் அனட்ரூ கோ, டென்னிஸ் வீராங்கனை சாவ் ஜோ லீன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அவர்களுக்கான விருதுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள விளையாட்டாளர்கள் அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்க இதுபோன்ற விருதுகள் ஊக்குவிப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am