நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தொடர்ச்சியாக 13ஆவது வெற்றியை கைப்பற்றியது ஜேடிதி

ஜார்ஜ் டவுன்:

மலேசிய கால்பந்துப் போட்டிகளில் ஜேடிதி அணியினர் தொடர்ச்சியாக 13ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

பினாங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் பினாங்கு அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜேடிதி அணியினர் 39 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக 13ஆவது வெற்றியை ஜேடிதி அணியினர் பதிவு செய்துள்ளனர்.

மற்ற ஆட்டங்களில் திரெங்கானு, போலீஸ்படை ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset