நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி

பெங்களூரு:

அடுத்த ஆண்டு முதல் பெங்களூரில் ஐபோன் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்கும் என்று கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களுரு, தேவனஹள்ளி அருகே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்.

ரூ.13,600 கோடி செலவில் தொடங்கப்படும் தொழிற்சாலையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

3 கட்டங்களாக நிறுவன தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான், ஆண்டுக்கு 2 கோடி ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset