
செய்திகள் இந்தியா
மணிப்பூர் கலவர விசாரணை நடத்த நீதிக் குழு
இம்பால்:
மணிப்பூரில் கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குறித்து மாநில அரசு நான்கு வாரங்களில் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது,
இதனால் இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடங்கியதில் பெரும் கலவரம் மூண்டது.
இதில் 80 பேர் வரை உயிரிழந்தனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 10,000 வீரர்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்று ஆய்வு நடத்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am