நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

D.IMMAN LIVE IN KUALA LUMPUR இசை நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது: SHOWPRO LIVE ENTERTAINMENT அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் இசையமைப்பாளர்  டி.இம்மானின் D.IMMAN LIVE IN KUALA LUMPUR இசைநிகழ்ச்சி புக்கிட் ஜலில் அக்ஸியத்தா அரேனாவிலிருந்து மெகா ஸ்டார் அரேனாவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான SHOWPRO LIVE ENTERTAINMENT நிறுவனம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, புக்கிட் ஜலில் அக்ஸியத்தா அரேனாவில் இந்த இசைநிகழ்ச்சி நடைபெறும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும்  இசைநிகழ்ச்சியின் பிரம்மிப்பை மேலும் மெருகேற்றிட இந்த மாற்றம் அவசியமாகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் நிலையான விலைகளில் விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset