
செய்திகள் இந்தியா
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி 5 ஹிந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகக் குழு சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாக குழு சார்பில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முனீர், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த மசூதியில் உள்ள தொழுகைக்கு கை, கால் சுத்தம் செய்யப்பட்ட நீர் ஊற்றை சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி நிறுத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm