
செய்திகள் வணிகம்
ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்ததற்காக தொழிலாளர்களுக்கு 13.4 மில்லியன் திர்ஹம் வெகுமதி: ஊழியர்களின் பெற்றோர்களையும் அழைத்து வந்து விழாவைக் கொண்டாடிய இந்திய தொழிலதிபர்
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடி அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 13.4 மில்லியன் திர்ஹம்களை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்ட Aries Group of Companies அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களுக்காக அதன் 25 ஊழியர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளது.
மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வெள்ளி விழா பரிசை ஏரீஸ் குழுமத்தின் நிறுவனர் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சோஹன் ராய் என்பவர் அறிவித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கடந்த 25 ஆண்டுகளை நாங்கள் சிந்திக்கும்போது, எங்கள் ஊழியர்கள், அவர்களுக்கு ஆதரவளித்த அவர்களது குடும்பத்தினரின் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார். மேலும், இந்த வெகுமதிதான் அவர்களுக்கு நாங்கள் கூறும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கடந்த 25 ஆண்டுகளை நாங்கள் சிந்திக்கும்போது, எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த அவர்களது குடும்பத்தினரின் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார். மேலும், இந்த வெகுமதிதான் அவர்களுக்கு நாங்கள் கூறும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய ராய், எந்தவொரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் ஊழியர்களின் மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதாகவும், அதனால் நிகழ்ச்சிக்கு பெற்றோரை அழைத்து முழு குடும்பத்திற்கும் நிதி வெகுமதிகளை வழங்குவது போன்ற முயற்சிகள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஏரீஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதத்தை வளர்க்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே, குழுவில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பணியை நிறைவு செய்துள்ள ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெகுமதியை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின் பெற்றோருக்கு வழங்கும் தனித்துவமான என்ற கொள்கையை நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் கொண்டுள்ளது. கூடவே, நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றொரு திட்டம், அதன் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகும். இந்த நிறுவனம் 1998இல் தொடங்கப்பட்டதில் இருந்து அதன் லாபத்தில் 50 சதவீதத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் கொள்கையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: Khaleej
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am