நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வாட்ஸ் அப்பில் தகவலைத் திருத்தம் செய்யும் அம்சம் அறிமுகம்

கலிபோர்னியா: 

வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் இனி தவறாக அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. பயனர்கள் அதை எடிட் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். 

பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

மெசேஜ்களை எடிட் செய்வது எப்படி?

பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜின் சாட்-டை திறக்கச் செய்ய வேண்டும்.

அதில் பயனர்கள் திருத்த விரும்பும் தக்வலை சில நொடிகள் அழுத்தி (லாங் பிரஸ்) பிடிக்க வேண்டும.

தொடர்ந்து எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம்.

இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் பில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு இது கிடைக்கப் பெற சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset