நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

11,000 பணியாளர்கள் பணி நீக்கம் - வோடபோன் அறிவிப்பு 

லண்டன்:

பிரிட்டன் தொலைபேசி நிறுவனமான வோடபோன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க்கெரிட்டா டெல்லா வாலே ஓர் எளிமையான அமைப்பை விரும்புவதால் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. 

எங்கள் செயல்திறன் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. நிலையான சேவையை வழங்க, வோடபோன் நிறுவனத்தில் சில மாற்றங்கள் தேவை என்று என்று டெல்லா வாலே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் பங்கு சந்தை வீழ்ச்சியால் டிசம்பர் தொடக்கத்தில் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீட் பதவி விலகினார். 

தற்போது £15 பில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் அந்நிறுவனம் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: Economic Times

தொடர்புடைய செய்திகள்

+ - reset