
செய்திகள் வணிகம்
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணந்தது மஹா பெர்ஜாயா நிறுவனம்
பெட்டாலிங் ஜெயா:
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விநியோகிப்பாளரான மஹா பெர்ஜாயா நிறுவனமும் இணைந்து உள்ளது என்று அதன் இயக்குநர் டாக்டர் அமீர் ஹம்சா கூறினார்.
வசதிக் குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அசராங்கம் இந்த ரஹ்மா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
5 வெள்ளிக்கு உணவு, பொருட்கள், குறைந்த விலையில் தங்கும் விடுதிகள், துரித உணவகங்கள் என பல திட்டங்கள் இதில் அடங்கும்.
அவ்வகையில் தற்போது மஹா பெர்ஜாயா நிறுவனமும் இந்த ரஹ்மா திட்டத்தில் இணைந்துள்ளது.
இதன் வாயிலாக வாயிலாக மஹா பெர்ஜாவில் மக்கள் 300 கிராம் மாட்டிறைச்சியும் 200 கிராம் ஆட்டிறைச்சியும் 5 வெள்ளிக்கு வாங்கலாம்.
மஹா பெர்ஜாயாவின் இந்த திட்டத்தின் வாயிலாக மக்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள்.
மஹா பெர்ஜாயாவின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு, நிறுவன உருமாற்றத்தின் அறிமுக விழாவில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மஹா பெர்ஜாயாவில் ரஹ்மா இறைச்சி திட்டத்தை விவசாய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ லோக்மான் ஹக்கிம் அலி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான வர்த்தகமாக மஹா பெர்ஜாயா ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக முன்னேறியுள்ளது.
மஹா பெர்ஜாயாவின் விற்பனை மையங்கள் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக இவ்வாண்டு பினாங்கு, ஜொகூர், சபாவில் விற்பனை மையங்களை திறக்கவுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 விற்பனை மையங்களை திறக்க மஹா பெர்ஜாயா இலக்கு கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடிப்படையாக கொண்டே மஹா பெர்ஜாயா செயல்பட்டு வருகிறது என்று டாக்டர் அமிர் ஹம்சா கூறினார்.
மஹா பெர்ஜாயா நிறுவனத்தின் ரஹ்மா திட்ட பொருட்கள் உட்பட மேல்விவரங்களுக்கு மக்கள் www.mahaberjaya.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm