
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மொக்கா புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே நாளை கரையைக் கடக்கும்
சென்னை:
வங்கக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா’ நாளை வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையை கரையை கடக்கும்.
இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘மொக்கா’ புயல் மே 11-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது 12-ஆம் தேதி (நேற்று) மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு, வடகிழக்காக நகர்ந்து, மேலும் வலுப்பெற்று 14-ஆம் தேதி (நாளை) நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது, 150-175 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 21, 2025, 2:43 pm
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 3:29 pm
என் வீட்டுக்கு வந்து போலீஸார் தொந்தரவு செய்கின்றனர்: ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக...
May 20, 2025, 12:45 pm
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
May 20, 2025, 11:54 am
சென்னையில் பரவலாக மழை: இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 17, 2025, 2:12 pm
தமிழகத்திலிருந்து 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளன...
May 16, 2025, 1:51 am
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?: குடியரசுத் தலைவர...
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm