செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியா சுற்றுலாப் பயணி கன்னத்தில் அறைந்த வனத்துறை அதிகாரி: கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானல் குணா குகைக்கு சென்ற மலேசியா சுற்றுலா பயணியை நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்தக் கூறி பெண் வன அதிகாரி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும்.
தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு நிலவும் கால நிலையை அனுபவிக்க வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் மலேசியா நாட்டை சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்து குணா குகை சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கும் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 10 ரூபாய் கட்டணத்தை மட்டும் செலுத்தி, குணா குகை உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது நுழைவு கட்டணத்தை ஆய்வு செய்த வேட்டை தடுப்பு தற்காலிக அதிகாரி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செல்ல நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் எனவும், நீங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மலேசியா சுற்றுலாப் பயணிகள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எந்த அறிவிப்பு பதாகைகள் இல்லை.
மேலும் நாங்கள் தமிழ் மொழி பேசுகிறோம் எதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைதொடர்ந்து வனத்துறையினறுக்கும், மலேசியா சுற்றுலாப் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.
இந்நிலையில் அப்பகுதியில் பணியாற்றுபவர்கள் மீது, மலேசியா சுற்றுலாப் பயணிகளில் வயதான பெண் ஒருவர் பிளாஸ்டிக் போன்ற பொருளை எறிந்துள்ளார்.
இதனைதொடர்ந்து பெண் அதிகாரி அந்த வயதான பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினறும், மலேசியா சுற்றுலாப் பயணிகளும் தனித் தனியாக கொடைக்கானல் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 9:32 pm
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
April 29, 2026, 1:54 pm
பாவேந்தர் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
April 28, 2026, 3:44 pm
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
April 27, 2026, 9:45 pm
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
April 27, 2026, 5:37 pm
திருச்சியில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை
April 27, 2026, 4:51 pm
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
April 26, 2026, 10:02 pm
