
செய்திகள் வணிகம்
50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் திருமண ஆடையை உருவாக்கி உலக சாதனை
மிலான்:
சில நேரங்களில் ஆடம்பரத் திருமணங்கள் மட்டுமல்ல அந்தத் திருமணங்களில் மணமகள்கள் உடுத்தும் ஆடையும் வைரல் ஆகிவிடுகின்றன. அந்த வகையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்களுடன் தைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான திருமண ஆடை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 14-ஆம் தேதி அன்று மிலனில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவில் இந்த ஆடை அறிமுகமானது.
இந்த ஆடையில் 50,890 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் உள்ளன.
இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதை தைப்பதற்காக மட்டும் 200 மணி நேரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45 ஆயிரம் படிகங்களுடன் ஓர் ஆடையை துருக்கியைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 3, 2023, 2:00 pm
பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி
June 1, 2023, 10:49 am
பெனாசோனிக் தொழிற்சாலை மூடப்படுவதால் மலேசியர்கள் வேலையை இழக்க நேரிடும்
May 27, 2023, 5:06 pm
சிறு, நடுத்தர, மைக்ரோ, நிறுவன மாநாட்டில் 500 பேராளர்கள்: நிவாஸ் ராகவன்
May 24, 2023, 6:54 pm
மலேசிய நாணயம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது: ப்ளூம்பெர்க்கின் கணிப்பு
May 17, 2023, 5:16 pm
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 2.2 பில்லியன் வெள்ளி நிகர லாபம்
May 16, 2023, 5:29 pm
11,000 பணியாளர்கள் பணி நீக்கம் - வோடபோன் அறிவிப்பு
May 15, 2023, 6:23 pm
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணந்தது மஹா பெர்ஜாயா நிறுவனம்
May 12, 2023, 1:13 pm