நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஸ்வீடனின் ஆராய்ச்சி ஏவுகணை தவறுதலாக நார்வேவைத் தாக்கியது

ஸ்டாக்ஹோம் :

வடக்கு ஸ்வீடனிலுள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் ஏவப்பட்ட ஆராய்ச்சி ஏவுகணை திடீரென பழுதடைந்து அண்டை நாடான நார்வேயில் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் தரையிறங்கியது. 

சுழியம் ஈர்ப்பு விசையில் நடத்திய சோதனையில் ஏவுகணை 250 கிமீ உயரத்தை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த ஆராய்ச்சி ஏவுகணை மலைகளில் 1,000 மீட்டர் உயரத்திலும், அருகிலுள்ள குடியேற்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் தரையிறங்கியதாக ஸ்வீடனர் ஸ்பேஸ் கார்பின் தகவல் தொடர்புத் தலைவர் பிலிப் ஓல்சன் தெரிவித்துள்ளார். 

தவறுதலாக நடக்கும்போது அதை சரிசெய்வதற்கான நடைமுறைகள் இருப்பதாகவும் இது தொடர்பாக ஸ்வீடன் மற்றும் நார்வே அரசாங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், ஏவுகணை தவறான பாதையை அடைந்ததற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset