
செய்திகள் தமிழ் தொடர்புகள்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கியது
மதுரை:
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுக்கு மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கமான ஒன்று.
குறிப்பாக, ஒவ்வொர் ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம்.
இன்று மதுரையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் உலா வருவார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am