செய்திகள் சிகரம் தொடு
வானமே எல்லை: வெற்றி பெறத் துடிக்கும் ஒரு விமானியின் கதை
கோலாலம்பூர்:
எட்டு ஆண்டுகளாக ஃபிட்ரி முஹம்மத் ஸைதி Fidzry Mohamad Zaidiக்கு வானம்தான் இரண்டாவது வீடாக இருந்தது.
விமானியாக பணியாற்றி வந்த இவருக்கு, மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சிக்கலற்ற இனிமையான வாழ்க்கை அமைந்திருந்தது.
எல்லாமே கொரோனா பெருந்தொற்று தனது கோர தாண்டவத்தை துவக்கும் வரைதான். அதன் பின்னர் எல்லாமே மாறிப்போனது.
அவர் பணியாற்றிய விமான நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதால் ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு விழுந்தது. இதனால் தன் மனைவியுடன் சேர்ந்த குடும்பத் தேவைகளைச் சமாளிப்பதற்காக சொந்தமாக ஏதேனும் தொழில் செய்யலாம் என முடிவெடுத்தார் ஃபிட்ரி.
2017ஆம் ஆண்டுதான் அவர் விமான கேப்டன் ஆகியிருந்தார். அந்த மகிழ்ச்சியை கொரோனா நீடிக்க விடவில்லை.
இவர் மனைவியுடன் இணைந்து தயாரித்து விற்பனை செய்த Curry meeக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நீலாய், நெகிரி எனப் பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அழைக்கத் தொடங்கினார்.
ஆனால், கடந்த ஆகஸ்டு மாதம் நிலைமை மீண்டும் மாறியது. கடும் நிபந்தனைகளுடன் கூடியநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இவர் வேலை பார்த்த விமான நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்படவே, அது தன் ஊழியர்களுக்கு ஊதியமற்ற கட்டாய விடுமுறையை அளித்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஃபிட்ரியும் ஒருவர்.
அதன் பின்னர் மனைவியுடன் சேர்ந்து முழு நேர சொந்தத் தொழிலில் ஈடுபட முடிவு செய்தார். பிறகு பூ வேலைப்பாடுகளை அழகாகச் செய்து கொடுக்கும் தொழிலை தொடங்கினார் இந்த 32 வயது விமானி.
சிறு வயதில் தன் தாயாரிடம் பூ அலங்காரக் கலையைக் கற்றுக் கொண்டது அவருக்கு இப்போது கைகொடுத்தது.
"ஒரு விமானியாக நான் எதையும் முறையாகத் திட்டமிடுவது வழக்கம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப குறுகிய நேரத்தில் உடனே என்னை மாற்றிக் கொள்வேன்," என்கிறார் ஃபிட்ரி.
தன் மாமியாரின் பெயரில் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்த அவரது மனைவி ஃபர்டியானா Faradiana, இவர்களது வீட்டையே காட்சிக்கூடமாக மாற்றியுள்ளார்.
வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் செயற்கைப்பூக்களை வைத்து அலங்காரம் செய்யும் சேவையை அளிக்கிறது இவர்களது நிறுவனம். மேலும். பரிசுக் கூடைகளையும் செய்து தருகிறார்கள்.
"ஐம்பது வெள்ளி முதல் பல ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள சேவைகளை வழங்குகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான பூக்களைக் கொண்டு இன்றைய பாணிக்கு (டிரெண்ட்) ஏற்ப சேவை அளிப்பதால், எங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. கடந்த நோன்புப் பெருநாள் வேளையில் வியாபாரம் வளர்ச்சி கண்டது.
"கொரோனா பெருந்தொற்று ஒரு குடும்பமாக எங்களை மேலும் நெருக்கமாக்கி உள்ளது. மேலும், எந்த சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்படவும் கற்றுக்கொடுத்துள்ளது," என்கிறார் ஃபர்டியானா Faradiana.
இந்த இளம் விமானியின் வாழ்க்கை மீண்டும் 'டேக் ஆஃப்' (Take Off) ஆகியுள்ளது.
நன்றி: FMT
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:09 pm
70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?
July 3, 2024, 8:18 pm
இலங்கையில் பஸ் ட்ரைவராக இருந்தவர் இன்று கோலியின் அருகில் உலகக்கோப்பையுடன்! யார் இவர்?
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
March 20, 2023, 11:31 am
படமும் அழகு! அது தருகின்ற செய்தியும் அழகு!
November 26, 2022, 10:26 am
எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
November 6, 2022, 11:02 am
பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
October 23, 2022, 12:02 pm