நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சீனாவை பின்னுக்குத் தள்ளி உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்

புது டெல்லி:

142.86 கோடி மக்கள்தொகையுடன் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி உள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

142.57 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

1950 முதல் உலக  மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உலக மக்கள்தொகை முன்கணிப்பு 2022இன் படி, 2050ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 166.8 கோடியாகவும், சீன மக்கள்தொகை 131.7 கோடியாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.

அதுபோல, கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 141.2 கோடியாகவும், சீன மக்கள்தொகை 142.6 கோடியாகவும் இருந்தது. வரும் நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் எனவும் கணக்கிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியா தற்போது 142.86 கோடி மக்கள்தொகையுடன் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 10-19 வயது வரை 18 சதவீதம் பேரும், 10}24 வயது வரை 26 சதவீதம் பேரும், 15-64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப்பது இந்தப் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் புள்ளிவிவரம் குறித்து கருத்து தெரிவித்த சீனா, "மக்கள்தொகையில் அதிகரிப்பது முக்கியமல்ல, திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கைதான் முக்கியம்' என்று குறிப்பிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset