நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது

பெங்களூரு:

ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக  கன்னட நடிகர் சேத்தன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹிந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது. அதை உண்மையால் மட்டுமே வீழ்த்த முடியும். அந்த உண்மை, சமத்துவம்.
பொய்களுக்கான உதாரணங்கள்:

ஹிந்துத்துவ தத்துவ ஞானி வி.டி.சாவர்க்கரின் அறிக்கை, பாபர் மசூதி இடத்தில் ராமர் பிறந்ததாகக் கூறியது, திப்பு சுல்தானை உரி கவுடா, நஞ்சே கவுடா கொன்றதாக கூறும் கதை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துகளக் ஹிந்து மதத்தை புன்படுத்துவதாக  பெங்களூரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், சேத்தன்குமாரை  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். அவரை 14 நாள்கள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடிகர் சேத்தன்குமார் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கர்நாடகத்தில் இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset