நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை

புது டெல்லி: 

2023-இல் இதுவரை 10 பேருக்கு  விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே. சிங்  தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதிலில், விமானப் பயணத்தின்போது சக பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் பயணிகளுக்கு விமானப் பொது போக்குவரத்து நடத்தை விதிகளின் படி பறக்க தடை விதிக்கப்படும்.

விமான நிறுவனங்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2021ஆம் ஆண்டில் 66 பேரும், 2022ஆம் ஆண்டில் 63 பேரும் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

நிகழாண்டில், தற்போது வரை 10 பேர் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோருக்கு, முகக்கவசம் அணியாதது, விமானப் பணியாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset