
செய்திகள் இந்தியா
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
புது டெல்லி:
ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காதது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஏடிஎம்களில் அத்தகைய நோட்டுகள் வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ஒன்றிய அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், ஆர்பிஐ தகவல்படி 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2022 மார்ச் மாத இறுதியில் ரூ.27.057 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் இருந்தன.
ரூ.2000 நோட்டுகளை ஏடிஎம்களில் வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வங்கிகள் தங்க சுயவிருப்பப்படி முடிவெடுக்கின்றன.
ஒரு பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவை, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏடிஎம்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது வங்கிகள் ஏடிஎம்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புகின்றன என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am