செய்திகள் மலேசியா
ஆசியாவில் தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா உருவாகும்: மாட்ஃபா
ஷாஆலம்:
ஆசியாவில் தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா உருவாகும் என்று மாட்ஃபாவின் தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட் சிகே கோ கூறினார்.
ஃபன்பேர் தொடங்கி இன்று பல பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துறையாக இந்த தீம் பார்க் விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் இத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
மிகவும் தரமாகவும் நியாயமான கட்டணங்களுடன் இந்த தீம் பார்க்குகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலை நீடிக்கும் வகையில் ஆசியாவிலேயே தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா விளங்கும்.
இந்நிலையில் நாட்டில் உள்ள டீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மாட்ஃபா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் முயற்சியாக மாட்ஃபா கோல்டன் ஹோர்ஸ் விருது விழா நடைபெறவுள்ளது.
இவ்விழா வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கெந்திங்மலை ஃபேர்ஸ்வேல்டு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.
நாட்டில் உள்ள தீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 35 விருதுகளை இவ்விழா கொண்டு உள்ளது.
இந்த விருதுகளுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். நடுவர் குழுவின் முடிவுக்கு பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ரிச்சர்ட் சிகே கோ கூறினார்.
இவ்விருது விழா அறிமுக நிகழ்வில் மாட்ஃபாவின் ஆலோசகர் டத்தோ டாக்டர் குமரராஜா கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 5:32 pm
லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஆடவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன
October 3, 2024, 3:35 pm
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியர் கைது
October 3, 2024, 3:35 pm
1 எம்டிபி வழக்கில் நஜீப் விடுதலை செய்யப்படுவாரா?: அக்டோபர் 30ஆம் தேதி முடிவு
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm