செய்திகள் மலேசியா
ஒற்றுமையே மலாக்காவின் பலமாகும்: முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுப்
மலாக்கா:
மலாக்கா மாநிலம் ஒற்றுமையை தன்னுடைய வலிமையாகக் கொண்டு முன்னேறி வருகிறது என மலாக்கா முதலமைச்சர், டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுப் யூசோப் தெரிவித்துள்ளார்.
மொழி, பழக்கவழக்க வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் “மலாக்கா மக்கள்” என்ற ஒரே அடையாளத்தில் இணைந்துள்ளனர் என்றும், அந்த ஒன்றுபட்ட உணர்வே பல இன, பல மத சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டு மாநில அளவிலான விழாவில் உரையாற்றிய அவர், “மலாக்கா மக்கள் நேசிக்கும்” என்ற ஆட்சிக் கோட்பாடு வெறும் நடிப்பு அல்ல; மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்ட நிர்வாக அணுகுமுறை என விளக்கினார்.
இத்திட்டத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும், சிறுதொழில் வியாபாரிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மூத்த குடிமக்கள், பொருளாதார சவாலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்றார்.
மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், திடீர் வெள்ளப் பிரச்சினையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட ஏழு தடுப்பு திட்டங்கள் நல்ல பலன் அளித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 10.5 லட்சம் மக்கள் வசிக்கும் மலாக்கா மாநிலத்தில் மலாய், சீனர், இந்தியர், பிற இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்றனர். இந்த மாநிலம் ஒரு இனத்தால் அல்ல; ஒரே இலக்குடன் பலரின் ஒத்துழைப்பால் கட்டியெழுப்பப்பட்டது என அவர் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
