நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி

சென்னை:

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாட்டுகள் சபையின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த முயற்சிக்கு வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் சார்பாக திருவள்ளுவர் சிலையினை தந்து உதவுவதாக அதன் தலைவர் வி.ஜி. சந்தோசம் தெரிவித்தார்.

முன்னதாக. சென்னையில் சுவிட்சர்லாந்து தமிழ் இலக்கிய சங்க தலைவர், முனைவர். அருள்ராசா நாகேஸ்வரன் அவர்களை, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் மற்றும் வி.ஜி.பி. குழுமத் தலைவர், முனைவர். வி.ஜி.சந்தோசம் வரவேற்றும், சுவிஸ் தமிழ் இலக்கிய சங்க தலைவர், வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார்.

இக் கலந்தாலோசனையில் நேர்முக உதவியாளர் பீட்டர், கொரிய தமிழ் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளர் தாமோதரன், ஒருங்கிணைப்பாளர் நடராசன், மகேஷ் உடனிருந்தனர்.

- தயாளன் சண்முகம்  

தொடர்புடைய செய்திகள்

+ - reset