செய்திகள் சிகரம் தொடு
படமும் அழகு! அது தருகின்ற செய்தியும் அழகு!
துருக்கியைச் சேர்ந்த கவிஞர் நாஜிம் ஹிக்மத் அவர்கள் தம்முடைய நண்பர் ஆபிதீன் தீனோ அவர்களிடம் மகிழ்ச்சியை ஒவியமாக வரைந்து தருமாறு விண்ணப்பித்த போது ஆபிதீன் அவர்கள் வரைந்த ஒவியம் தான் இது.
சிதிலமாகக் கிடக்கின்ற அறையில், ஒழிகின்ற கூரையின் கீழ், உடைந்து போன கட்டிலில் மொத்தக் குடும்பமே நெருக்கமாக படுத்துக் கொண்டிருக்கின்ற காட்சியை - எல்லோருடைய முகத்திலும் ஆழ்ந்த நித்திரையிலும் புன்னகை பூத்திருப்பதுதான் ஹைலைட் - சித்திரிக்கின்ற ஒவியம்தான் இது.
இந்த ஒவியத்துக்கு ‘அதிகாரப் பூர்வமான மகிழ்ச்சி - Official Happiness' என்று பெயரிட்டிருந்தார் ஆபிதீன்.
நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கானல் நீராகிவிட, நாலாபுறமும் இல்லாமையும் போதாமையும் சூழ்ந்திருக்கின்ற போது, சந்தோஷப்படுவதற்கு சின்னச் சின்ன காரணங்களே போதுமானதாய் ஆகிவிடுகின்றது என்பதுதான் ஆபிதீனின் இந்த ஒவியம் தருகின்ற செய்தி.
துன்பமும் வலியும் வேதனையும் இல்லாத நிலைக்குப் பெயர்தான் மகிழ்ச்சி என்பதல்ல. துன்பத்தையும் வலியையும் மனமார ஏற்றுக் கொண்டு இறைவன் தந்துள்ள சின்னச் சின்ன அருள்வளங்களுக்கும் நன்றி செலுத்தியவாறு பொறுமையை மேற்கொள்வதற்குப் பெயர்தான் மகிழ்ச்சி..!
ஆஹா..! என்ன அருமையான சிந்தனை! எத்துணை உயர்வான பார்வை!
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
- லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:09 pm
70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?
July 3, 2024, 8:18 pm
இலங்கையில் பஸ் ட்ரைவராக இருந்தவர் இன்று கோலியின் அருகில் உலகக்கோப்பையுடன்! யார் இவர்?
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
November 26, 2022, 10:26 am
எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
November 6, 2022, 11:02 am
பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
October 23, 2022, 12:02 pm