நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது டெல்லி:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் குடும்பப் பெயர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.

இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தெரிவித்த கருத்துகளுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் இந்த உரிமை மீறல் நோட்டீûஸத் தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில்  பேசிய பிரதமர் மோடி, நேருவின் குடும்பப் பெயரை அவரின் குடும்பத்தினர் பயன்படுத்தாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், பிரதமர் மோடிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை வழங்கியுள்ளார்.

அதில்,நாடாளுமன்ற உறுப்பினரின் ஜாதி குறித்து தவறான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ததற்காக, மாநிலங்களவை அலுவல் விதி 188இன் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படுகிறது.

நேருவின் குடும்பத்தினரைக் கேலி செய்யும் தொனியில் பிரதமர் பேசியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset