செய்திகள் இந்தியா
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானைப் போல இந்தியாவிலும் ஆளும் ஒன்றிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி கூறினார்.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஜம்முவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மெஹபூபா முஃப்தி தொண்டர்களிடம் பேசுகையில்,
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்கள் வேதனையளிக்கின்றன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது.
ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், சிவசேனைத் தலைவர்கள் என பலரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
மெஹபூபா அண்மையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்தது சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக அவர் பேசுகையில், மதசார்பற்ற நாட்டில் வசித்து வருகிறோம். அந்த சிவன் கோயில் பிடிபி கட்சியின் மூத்த தலைவர் மறைந்த யஷ்பால் சர்மாவால் கட்டப்பட்டது. அவரது மகன் அழைப்பின் பேரில் அந்தக் கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஒருவர் மிகுந்த நம்பிக்கை, பக்தியுடன் அபிஷேகம் செய்ய பாத்திரத்தில் தண்ணீர் தந்தார். அவரை புண்படுத்தக் கூடாது என்று சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்தேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
