
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தங்கத்தை கடத்தி வருவதில் கேரளம் முதலிடம் தமிழகம் இரண்டாவதிடம்
புது டெல்லி:
வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதில் இந்தியாவியே கேரளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும் உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தங்கத்திற்கு இறக்குமதி வரி உள்ளிட்டவற்றோடு 18.45 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இதனால் அதிகரித்து வரும் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற தங்க கடத்தல் குறித்தும், இதில் உள்ள தேச விரோதக் கும்பல் குறித்த தகவல் குறுத்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் பதிலளிக்கையில்,
கடந்த 2020 முதல் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி வரையில் நாடு முழுவதும் தங்க கடத்தல்கள் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்து, 8, 956.49 கிலோ தங்கத்தை புலானய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், இந்தக் காலக்கட்டத்தில் நாட்டிலேயே கேரளத்தில் அதிக அளவில் 2,611 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,869.29 கிலோ தங்கம் அந்த மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதே காலக்கட்டத்தில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,317.43 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்க கடத்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 1,417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,125.38 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am