நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7,844 கோரி கோரிய மனு தள்ளுபடி

புது டெல்லி:

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.7,844 கோடி நிவாரணம் வழங்கக் கோரிய ஒன்றிய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 1984ஆம் ஆண்டு விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த 1989ஆம் ஆண்டு ரூ.715 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், உரிய கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து விபத்துக்குக் காரணமான நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான 'டவ் கெமிக்கல்ஸ்' நிறுவனத்திடமிருந்து ரூ.7,844 கோடி கூடுதல் இழப்பீடு கோரி ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சய் கன்னா, அபய் எஸ்.ஒகா, விக்ரம் நாத், ஜே.கே.மகேஷ்வர் ஆகிய 5 பேரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பு:

விஷவாயு கசிவு ஏற்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு கூடுதல் நிவாரணம் கோருவது ஏற்புடையது அல்ல. இவ்வளவு தாமதமாகக் கூடுதல் நிவாரணம் கோருவதற்கான காரணத்தையும் ஒன்றிய உரிய முறையில் விளக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் நிலுவையில் உள்ள ரூ.50 கோடியை ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிடுத்து நிறுவனத்திடம் இருந்து கூடுதல் நிவாரணம் கோருவதில் எந்தவித அடிப்படை சட்ட உரிமையும் இல்லை.

விபத்து நடந்த இடத்தை மீட்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது யுசிசி நிறுவனத்தின் புகாராக உள்ளது. எனவே, ஒன்றிய அரசின் சீராய்வு மனு ஏற்கும்படியாக இல்லை' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset