
செய்திகள் வணிகம்
துபாய் ரிஸான் தங்க நகைக்கடை மலேசியாவில் திறப்புவிழா
கோலாலம்பூர்:
துபாய் ரிஸான் ஜூவல்லரி நகைக்கடை தற்போது மலேசியாவில் தனது கிளை நிறுவனத்தை திறந்து உள்ளது.
துபாயில் பிரசித்திப் பெற்ற ரிஸான் நகைக்கடை மலேசியா, ஆசியான் நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் தலைநகர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ரிஸான் தங்க நகை மாளிகை தனது முதல் கிளையை திறந்து உள்ளது.
மலேசிய மக்களுக்கு உலகத் தரத்திலான வடிவமைப்புடன் கூடிய தங்க நகையுடன் தங்க முதலீட்டு வாய்ய்புகளை ஏற்படுத்தி தருவது ரிஸான் நகைக்கடையின் முதல் வாய்ப்பாக உள்ளது.
இலாபகரமான மலேசிய தங்க சந்தையில் ஏற்றுமதி துறையில் உள்ள வாய்ப்புகளை ரிஸான் நகைக்கடை குறி வைத்து உள்ளது.
13 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிஸான் நகைக்கடை மலேசிய சந்தையில் முதன்முறையாக நுழைந்துள்ளது. மலேசியா சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை தம்க்குள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷனூப் பிபி கூறினார்.
ரிஸான் மலேசியாவில் விரிவாக்கம் அதன் இயக்குநர்கள் ஷானுப், எச். ஹுசைன், எச். ஜமீல், எச். கலைமகன் முபாராக் ஆகியோர் முயற்சியில் செயலாக்கம் கண்டு உள்ளது.
அதே வேளையில் பிக் பாஸ் 6இன் வெற்றியாளர முஹம்மத் அஸீம் இந்த விழாவிற்கு தலைமையேற்று மலேசிய கிளையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am