நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்: டத்தோஸ்ரீ சரவணன் 

சென்னை:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் எனும் நிகழ்ச்சியில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழக முதல்வரின் பெயரில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் தமிழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.  

அயல்நாடு போற்றும் தமிழ்நாடு எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையும் அவரது ஆட்சியின் சிறப்புகளையும் மையப் புள்ளியாக வைத்து இந்த புகழாரங்கம் நடத்தப்பட்டது.

இதில் பல நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உரையாற்றினார்கள். 

இந்த நிகழ்வுக்கு முன் டத்தோஸ்ரீ எம். சரவணன் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்து பேசினார்.

May be an image of 2 people, people standing, flower and indoor

மலேசியா  தமிழ்நாட்டிற்கு இடையிலான உறவு உட்பட பல விவகாரங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No photo description available.

May be an image of one or more people and people standing

டத்தோஸ்ரீ சரவணனை தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், சுவிஸ் தமிழ் இலக்கிய சங்கத் தலைவர் முனைவர் நாகேஸ்வரன், மொரீசியஸ் மகாத்மா காந்தி கல்வி ஆய்வு மையத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் ஜீவன் ஆகியோரும் முதல்வரை சந்தித்தனர்.

டத்தோஸ்ரீ எம். சரவணன் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் தமிழக முதல்வர் கடந்து வந்த பாதை, தமிழகத்திற்கும் மலேசியாவிற்கு இடையிலான தொப்புள்கொடி உறவு, இலக்கியம், கலை. கலாச்சாரம் என்று பல அம்சங்களை அவர் தனக்கே உரிய பாணியில் தொட்டுப் பேசினார்.

அமைச்சர்கள் சேகர் பாபு, தங்கம் தென்னரசு, அன்பில் பொய்யாமொழி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

- சென்னையிலிருந்து ஸ்டாலின் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset