
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வட மாநிலத்தவர் குறித்த வதந்தி கண்காணிப்புக் குழு அமைப்பு: சைலேந்திரபாபு
சென்னை:
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதுபோன்ற போலி வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்கு பதிந்து வதந்தி பரப்பியோர் மீது கைது நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், ‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, அவர்கள் கோரும் தகவல்களை அளிக்க 5 போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஐஜி அவினாஷ் குமார், டிஐஜி அபிஷேக் தீக் ஷித், துணை ஆணையர் ஹர்ஷ் சிங், எஸ்.பிக்கள் ஆதர்ஷ் பச்சேரா, சண்முக பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am