
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகினர்
சென்னை:
சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், பாஜகவின், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜவில் இருந்து தற்போது விலகி உள்ளனர்.
இதன்படி மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.
ஆதாரம்: இந்து தமிழ்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am