நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு காயம்

மும்பை:

ஹைதராபாதில் நடைபெற்ற படப்படிப்பில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது

ப்ராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உருவாகி வரும் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஹைதராபாதில் நடைபெற்ற சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது, அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக படப்பிடிப்பு இடத்திலிருந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார்.

அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், ஹைதாராபாதில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை எடுத்துக்கொண்டார்.

பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வெடுக்க தனது மும்பை வீட்டுக்குத் திரும்பினார்.

1982இல் "கூலி' திரைப்பட படப்பிடிப்பின்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset