
செய்திகள் கலைகள்
அயோத்தி - திரை விமர்சனம் - மனிதத்திற்கு ஏது மதம்?
ராமேஸ்வரத்திற்கு வரும்
ஒரு வடக்கத்திக்குடும்பம் தெற்கத்தி மனிதர்களின் மானுட அன்பில் புனிதநீராடித் திரும்பும் காட்சிகளே திரைக்கதை.
விஜயகாந்த்,அர்ஜூன் படங்களில் சித்தரிக்கப்பட்ட அப்துல் மாலிக் எனும் பெயர் உண்மையில் எப்படிப்பட்ட அன்பாளன் என்பதை நச் என அறைந்து சொல்லும் க்ளைமாக்ஸ்.
இந்தப் புதிய ராமாயணத்தில் ராமன், சீதை,...என பல கதாபாத்திரங்கள். தமிழர்கள் அரக்கர் வம்சம் அல்ல; பேரன்பின், மானுடத்தின்.. தூதுவர்கள் என முழங்கும் second layer நுட்பங்களின் விவரிப்பு!
குல்லா, நீண்ட தாடி, நெற்றித் தழும்பு..என எவ்வித அடையாளமும் இல்லாமல் ஒரு தூய முஸ்லிமுக்கு உரிய உயர்ந்த பண்புகளுடன் சசிகுமார் கதாபாத்திரம், தமிழக முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பான்மையானவர்களின் வார்ப்பு.
ஒரு உசுருக்காக மதுரை மருத்துவமனை மார்ச்சுவரியில் ஒரு ஊரே கதறித்துடிப்பதும் அந்தப் பெரும் பாசத்தைக்கண்டு வடக்கத்திப்பெண் மருளும் விழிகளோடு பார்த்து மிரள்வதும்..அடடா...!
அயோத்தி ஜானகியின் உடலின்மீது தெளிக்கும்படி நம்ம ஊரு அப்துல் மாலிக் ராமேஸ்வரம் தீர்த்தத்தைக் கொடுப்பதும், அதை வாங்கி அவள் உடல்மீது மகள் தெளிக்கையில் "அட போப்பா control பண்ணமுடியலை" என நம் விழிகளும் துளிகளைச் சிந்துகின்றன.
இந்தியாவின் ஆன்மாவை தேசாந்திரியாய்த் திரிந்து கண்டு உணர்ந்த அண்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் (கதை, திரைக்கதாசிரியர்) பல உண்மை நிகழ்வுகளின் வழியே ஒரு அற்புதத்தைக் கதையாக்க, தயாரிப்பாளரும் - இயக்குநர் குழுவும் நேர்த்தியாக மதவாதக் குளிரில் நடுங்கும் இந்தியத் தாய்க்கு ஓர் அழகிய கம்பளி சால்வை போர்த்தியுள்ளனர்.
சவுதி அரேபியா-தமாம் நகரில் வசிக்கும் சகோதரர் Abdul Sathar, துபாயில் வசிக்கும் தம்பி Kausar Baig ஆகியோர் செய்துவரும் மாபெரும் மானுட சேவையை இதில் சசிகுமார் ஏற்று மிளிர்ந்து ஒளிர்கிறார்...!
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ottல வர்றப்ப பாத்துக்கலாம் என்றோ, Tamil rockersல வந்திருக்கா என தேடாமலோ, தியேட்டர் சென்று பார்ப்பதுதான். நுட்பமான அற்புதங்களை அகன்ற திரையில் காண்பதே சிறந்த காட்சி அனுபவம். அதுமட்டுமல்ல, புனித நீராட, பிழைப்பிற்காக இங்கு வரும் வட இந்திய மக்கள்மீது நாம் காட்டவேண்டிய கருணையையும் கண்டுகொள்வதாகும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்", "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" எனும் ஆதித்தாய்மையின் வம்சாவழி அல்லவா நாம்?!
திரை விமர்சனம்: கண்மணி ராஜாமுகமது.
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm