
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டாக்காவில் வங்கதேச தமிழ் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்
டாக்கா:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 2023 ம் ஆண்டுக்கான பொங்கல் விழா பிப்ரவரி 21ம் தேதி வங்கதேச தமிழ் தமிழ் சங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.
மரபார்ந்த அரிசி மாவுக்கோல வரவேற்பில் இருந்து, தமிழ் மண்ணின் கலை வடிவங்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வங்கதேசத்துக்கான இந்திய தூதுவர், பிரணாய் வர்மா கலந்து கொண்டார்.
கும்மியாட்டம், கரகாட்டம், புலியாட்டம், அடிமுறை தற்காப்பு கலை மற்றும் பல்வேறு தமிழ் ஆளுமைகளின் வேடமணிந்த குழந்தைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
16 வகையான பதார்த்தங்களோடு வாழையிலை விருந்தோம்பலும், பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகள், பெரியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
முறைப்படியான தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகளும் பொறுப்பெற்றுக் கொண்டனர். தமிழ் மற்றும் பல்வேறு
சமூகத்தை சார்ந்த 600 க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் விழாவில் பங்கேற்றனர்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am