
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரூ.18.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில்அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் (அகழ்வைப்பகம்) அமைக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
பின்னர், ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am