நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தடுப்பூசி போட்டுக்கொள்ள சிங்கப்பூரர்கள் ஆர்வம்: முன்பதிவு இரு மடங்காகிறது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அங்கு தடுப்பூசிக்கான முன்பதிவு இருமடங்காக அதிகரித்துள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவைப் போல் சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வழி ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அன்றாட போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நாள்தோறும் சராசரியாக 47,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அந்த எண்ணிக்கை நாளுக்கு 80,000 தடுப்பூசிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

Singapore residents aged 60-69 to get Covid-19 vaccine from March, rest of  population from April | The Star

இந்த நிலையில் மூன்று தடுப்பூசி நிலையங்களை நிர்வகித்து நடத்தும் ஒரு சுகாதார பராமரிப்பு நிறுவனம், முன்பதிவு எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது என தமிழ் முரசு நாளைடு செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் துரித தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை மேலும் 500,000 பேர் முதல் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அதிக தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவும் கூடி வருகிறது.

தடுப்பூசி மருந்து கொள்முதல் திட்டத்தை முன்னதாகவே நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி இயக்கத்தை வேகப் படுத்த முடிந்துள்ளதாக பல அமைச்சுகளை உள்ளடக்கிய கோவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதனால் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்திற்குள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற புதிய இலக்கை நிறைவேற்றக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset