நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சோயுஸ் விண்கலத்தில் கசிவு: அடுத்த விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு

மாஸ்கோ:

சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதால் புதிய விண்கலத்தை வரும் 24ஆம் தேதி அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது.

இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷியர்கள், 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வரும்.

இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள சூயஸ் ஆய்வுக் கலம் பழுதடைந்துவிட்டதால், அங்கிருக்கும் வீரர்களை மீட்டு அழைத்து வருவதற்காக புதிதாக ஒரு விண்கலம் வரும் 24ஆம் தேதி அனுப்பப்படும்.

அந்த விண்கலம் முன்னதாகவே அனுப்பப்படுவதாக இருந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset