நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை: பட்ஜெட்டில் ஏமாற்றம்

புது டெல்லி:

இந்தியாவில் 10 மாதங்களாக உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை.

தொடர்ந்து 10வது மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றறமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.102.63க்கும், டெல்லியில் ரூ.96.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.94.24க்கும், டெல்லியில் ரூ.89.62க்கும் விற்பனையானது.

இந்த விலை குறைப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் விலை குறைப்பு அறவிப்பு வெளியிடபடாததால் மக்கள் ஏமாற்ற மடைந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset