
செய்திகள் உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15ஆம் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நிக்கி ஹாலே அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார். தெற்கு கரோலினா மாநிலத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார்.
அதோடு டிரம்ப் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில் இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும் என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:31 pm
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
March 22, 2023, 1:22 pm
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
March 22, 2023, 10:31 am
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
March 22, 2023, 9:11 am
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
March 22, 2023, 12:45 am
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
March 21, 2023, 9:51 pm
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
March 20, 2023, 7:37 pm
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
March 20, 2023, 6:58 pm
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு
March 20, 2023, 3:47 pm