நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்

ஹெல்சிங்கி:

உலகின் ஆக மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து (Finland) தொடர்ந்து ஒன்பதாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர World Happiness அறிக்கை அந்த விவரங்களைத் தெரிவித்தது.

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் (University of Oxford) ஆய்வு நிலையம் 140க்கும் மேற்பட்ட நாடுகளையும் வட்டாரங்களையும் வரிசைப்படுத்தியது.

சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், ஊழலின்மை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவை மதிப்பிடப்பட்டன.

பின்லந்துக்கு அடுத்து பட்டியலில் ஐஸ்லந்து (Iceland) இரண்டாம் இடத்தையும் டென்மார்க் (Denmark) மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அடுத்த இடங்களை கோஸ்டாரிக்கவும் ஸ்வீடனும் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் இரண்டு நிலைகள் பின் சென்று 36ஆம் இடத்தைப் பிடித்தது. மலேசியா 64 இடத்தில் உள்ளது. 

இந்தியா 118ஆவது இடத்தில் இருக்கிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆங்கிலம் பேசும் நாடுகளில் இளையர்களின் நலன் மோசமடைவதாக ஆய்வு குறிப்பிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset